ZEE5|Tamil movies online|-அந்த நாள் முதலாய்!

ZEE5|Tamil movies online|-அந்த நாள் முதலாய்!

அந்த நாள் முதலாய்!

 

ZEE5|Tamil movies online|

 

MGR காலம் முதல் அதர்வா வரையில் ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் ஹீரோக்கள் ஒட்டுமொத்தமாகக் கதையைத் தன் தோளில் சுமக்கும் வண்ணம் படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.சில வெற்றிப் பாதையில் பயணிப்பினும் , பலரது முயற்சிகள் சில காரணங்களினால் பின்னுக்குத் தள்ள படுகின்றன.மக்களை மகிழ்விக்கும் இப்போர்க்களத்தில் சில ஹீரோ சார்ந்த படங்களை ZEE5 Tamil movies Online -இல் கண்டுகளியுங்கள்!

 

மெர்சல்(2017):

அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் ஹீரோவாகவும் , லட்சுமி மேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாகவும் நடித்த படம் தான் “மெர்சல்”.மருத்துவமனையைக் கோவிலாகவும் ,  மருத்துவரைக் கடவுளாகவும் பாவிக்கும் நம் சமூகத்தில் வியாபாரமாக மாறி வரும் மருத்துவம்,அதன் விளைவுகள் எனக் கதை இம்மையக்கருவைச் சுற்றியே நகர்கிறது.

 

மருத்துவ மாஃபியா பற்றி எத்தனையோ படங்களில் வந்திருப்பினும் அதனுள் தனித்து நிற்கின்றது இப்படம். காரணம் விஜயின் தெள்ளத்தெளிவான நடிப்பு என்று சொன்னால் மிகையாகாது.மூன்று கதாபாத்திரம் ஆயினும் மூன்றிற்கும் தெளிவான வேறுபாடு காட்டியிருக்கிறார் விஜய்.மேஜிக் செய்யும் விஜய் துரிதமாக மேஜிக் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கின்றார்.ஐந்து ரூபாய் டாக்டராக வரும் விஜய் இலவச மருத்துவம் பற்றி பேசும் காட்சிகள் பலத்த கரகோஷத்தை அள்ளும்படியானது.ஃப்ளாஷ்பேக்கில் வரும் மதுரைக்கார தளபதி மருத்துவமனைக்கு 23 கி.மீ கடந்து செல்ல வேண்டும் என அறியும் போது “இங்க கட்ட வேண்டியது கோவில் இல்லடா….ஹாஸ்பிடல்” என அவலத்தில் அலறுவது தத்ரூபமாக இருக்கிறது.S.J.சூர்யா ஏமாற்றும் மருத்துவராகவும்,மற்ற கதாபாத்திரங்களும் அவர்கள் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.மொத்தத்தில் மெர்சல் மக்கள் அனைவரையும் மெர்சலடைய செய்துவிட்டது.

 

உலகளவில் சிறந்த படத்திற்கான பிரிட்டனின்.IARA விருதை மெர்சல் தட்டிச் சென்றதைப் பற்றி அறிந்து கொள்ள பின்வரும் செய்தியைக் கிளிக் செய்யுங்கள்!!

https://www.thenewsminute.com/article/vijay-s-mersal-wins-international-award-78864

 

இருமுகன்(2016):

          

           ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாகவும், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஹீரோயின்களாகவும் நடித்த படம் தான் “இருமுகன்”.மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடைபெற்ற தாக்குதலைப் பற்றி துப்பறிய நியமிக்கப்படுகிறார் இந்திய உளவுத்துறை நிபுணியான அகிலன்(விக்ரம்).

விசாரனணயில் அகிலன் சாதாரண மக்களைச் சக்தி வாய்ந்த மக்களாக மாற்றும் அதிபயங்கர ஆபத்தான மருந்தைக் கண்டுபிடித்த ‘லவ்(விக்ரம்)’ என்ற பழைய எதிரியைச் சந்திக்க நேர்கிறது.கதைக்களம் அகிலன், லவ் சுற்றியே நகர்கிறது.

 

படத்தின் பெயரிற்கு ஏற்றாற்போல் இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களையும் கச்சிதமாகச் செய்துள்ளார் விக்ரம்.அர்ப்பணிப்பு என்ற வார்த்தைக்குத் தமழ் சினிமா அகராதியில் ‘விக்ரம்’ என்பதே பொருள் போலும்.உளவுத் துறை அதிகாரியாகவும் திருநங்கையாகவும் வேறுபட்ட சாயலில் அவரது கதாபாத்திரம் பேசுகிறது.உளவுத்துறை விசாரணையின் போது ஒவ்வொருவரும் உண்மையைச் சட்டென்று ஒத்துக்கொள்வது நடைமுறையில் எக்காலத்திலும் நடைபெறாத வகையில் நம்பத் தகாத வண்ணம் உள்ளது.மலேசியாவில் மருந்துகளை உபயோகப்படுத்தித் திருநங்கை செய்யும் காட்சிகள் வித்தியாசமான அனுபவத்தைத் தருகின்றது.நயன்தாரா ,நித்யா மேனனிற்குக் கதையில் பெரிய முக்கியத்துவம் இல்லை எனினும் கொடுத்த கதாபாத்திரத்தைச் சரியாகச் செய்துள்ளனர். விறுவறுப்பான கதைக்களம் அமைந்திருக்கும் பட்சத்தில் இருமுகன் குதிரை அதிக நாள் ஓடியிருக்கக் கூடும்.

தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்த இருமுகன் படத்தின் ஆடியோ வெளீயீட்டு விழாவின் தொகுப்பை https://youtu.be/2lgSi1N0ktI -இல் காணுங்கள்!!

 

சைத்தான்(2016):

 

              இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி , அருந்ததி நாயர் நடித்த படம் “சைத்தான்”.மென்பொருள் பொறியாளரான தினேஷ்(விஜய் ஆண்டனி) அனாதையான அருந்ததியைக் கல்யாணம் செய்து கொண்ட பிறகு மனதளவில் மிகவும் பாதிப்படைகிறார்.அவரது மேலாளர் அவரை மனநோய் மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் போது அறியப்படும் ஆச்சரியமூட்டும் தினேஷின் கடந்த கால ரகசியங்களைச் சுற்றி நகர்கின்றது கதை.

 

சுஜாதா எழுதிய “ஆ..!” என்ற நாவலைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட படம் தான் இந்ந “சைத்தான்”.உயிரோட்டமுள்ள சுஜாதாவின் நாவல் கதை அமைப்பு படத்தின் முன்பகுதியிற்குப்  பலம் என்றே சொல்ல வேண்டும்.படத்தின் இரண்டாம் பகுதியின் கதைக்களம் சாதரண மசாலா படத்தைப் போன்று அமைய படத்தில் விறுவிறுப்பு போனது.மேலும் இரண்டாம் பகுதி சில ஹாலிவுட் படங்களின் கதையை வைத்து தைத்தது போன்ற தோற்றமளிக்கின்றது.வழக்கமாக வித்தியாசமான கதையம்சம் உடைய படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆண்டனி இம்முறையும் அவரை நிரூபித்து விட்டார் அவரது நடிப்பிலும் கதைத் தேர்விலும்!வில்லன் கதாபாத்திரம் பேசும்படி கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கலாம்.இரண்டாம் பகுதி கதையைச் சற்று சுவாரஸ்யமாக மாற்றி அமைத்து இருக்கும் பட்சத்தில் இந்த சைத்தான் இன்னும் மக்களை அலற விட்டிருக்கும்.

 

சைத்தான் படத்தின் டீசர் வெளியான போது தமிழ்  சினிமா உலகில் ஏற்பட்ட பரபரப்பு மிகுந்த எதிர்பார்ப்பு பற்றி அறிந்து கொள்ளலாம் இந்த செய்தியில்!!https://www.indiatoday.in/movies/regional-cinema/story/saithan-teaser-out-vijay-antony-arundhathi-nair-bichagadu-341981-2016-09-19

 

கழுகு(2012):

        இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் சேராவாக கிருஷ்ணா சேகரும்,கவிதாவாக பிந்து மாதவியும் நடித்த படம் தான் “கழுகு”.கொடைக்கானல் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோரின் பிணங்களை மீட்டு எடுத்து வரும் “கழுகு” கும்பலில் நால்வரில் ஒருவர் சேரா.ஒரு கட்டத்தில் கூலி வேலை செய்யும் கவிதாவும் சேராவும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.வில்லன் சிறை செல்ல சேரா காரணமாக முடிவில் சேரா,கவிதா இருவரின் உயிர் நீங்குவதே கதைக் கரு.

 

மற்ற படங்களைப் போல் நடிகர் சார்ந்த கதையாக இருப்பினும் பிந்து மாதவி படத்தின் கதையைக் கிருஷ்ணாவோடு சேர்ந்து சுமந்திருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. சேராவின் மீது காதல் வயப்பட்டு சுற்றும் காட்சிகளில் கவிதாவாகவே வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். கழுகு போன்று ஆபத்து மிகுந்த அடர்த்தியான காடுகளிலும் கிருஷ்ணா பிணங்களைத் தேடும் காட்சிகள் தத்ரூபத்தின் உச்சம்.தம்பி ராமய்யா,கருனாஸ் ஆகியோர் அவர்கள் ஏற்ற குணச்சித்திர கதாபாத்திரங்களைத் திறம்பட செய்துள்ளனர்;கதைக்கு மெருகேற்றி உள்ளனர்.வில்லனாக நடித்த ஜெய பிரகாஷும்

ஜயா என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்துவிட எட்டிய உயரம் வரை பறந்தது இக்கழுகு.

 

அலறவிட போகும் கழுகு இரண்டாம் பாகம் பற்றி அறிய இதைக் கிளிக் செய்யுங்கள்!

https://www.google.co.in/amp/s/m.timesofindia.com/entertainment/tamil/movies/news/kazhugu-2-shooting-begins-today/amp_articleshow/64774407.cms

 

ஹீரோ சார்ந்த இந்த ஆக்ஷன் திரைப்படங்கள் அனைத்தையும் உங்கள் ZEE5 Tamil movies online -இல் குடும்பத்தோடு கண்டுகளியுங்கள்!!

No Comments

Leave a Reply